’மாமன்னன்’ படப்பிடிப்பில் பிரபல நடிகர் இணைந்துள்ளதை படக்குழு தெரிவித்துள்ளது.
’மாமன்னன்’ படப்பிடிப்பில் பிரபல நடிகர் இணைந்துள்ளதை படக்குழு தெரிவித்துள்ளது.
’பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களை அடுத்து, மாரி செல்வராஜ் இயக்கும் படம், ’மாமன்னன்’. இதில், உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கிறார். நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மலையாள நடிகர் பகத் ஃபாசில், வடிவேலு உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.
இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு, சேலம் அருகே நடந்து வந்தது. இதில் உதயநிதி, வடிவேலு பங்கேற்றக் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. முதல்கட்ட படப்பிடிப்பு மார்ச் மாதம் முடிவடைந்துவிட்டது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது.
இதன் படப்பிடிப்பில் நடிகர் பஹத் பாசில் இணைந்துள்ளார். படப்பிடிப்பில் இணைந்த அவரை, இயக்குநர் மாரி செல்வராஜ், இணைத் தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.