மாவட்ட செய்திகள்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வெட்டுவானம் சென்னை பெங்களூர் தேசிய நநெடுஞ்சாலையில் 10 அடி ஆழம் உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கார் விழுந்து விபத்து.


வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வெட்டுவானம் சென்னை பெங்களூர் தேசிய நநெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த SWIFT DZIRE TN 05 BR 9925 கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலை ஓட்டி அருகில் உள்ள 10 அடி ஆழம் உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கார் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதனைத் தொடர்ந்து கார் விபத்துக்குள்ளானதை நேரில் கண்டவர்கள் உடனடியாக காவல் நிலையம் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துவிட்டு காரில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில்அருகில் இருந்த இளைஞர்கள் ஈடுபட்டனர். காரில் சிக்கி இருந்தவர்களை காரின் கண்ணாடியை உடைத்து மீட்டனர் மேலும் காரில் பயணித்த 4 பேரில் 3 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு இருக்கவே உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.



மேலும் பள்ளிகொண்டா காவல் நிலைய உதவி ஆய்வாளர் பள்ளத்தில் இருந்து காரை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர் மேலும் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
