BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலையில் 2700 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு.

மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சோதனையில் சிக்கிய 2700 லிட்டர் சாராய ஊறல் சாராயம் காய்ச்ச வைத்திருந்த மூலப்பொருட்கள் பேரர்கள் அடித்து ஒழிப்பு.

வேலூர் அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலையில் சாராயம் காய்ச்சி அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

அதைத்தொடர்ந்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் பேபி தலைமையிலான போலீசார் அல்லேரி சுற்றுவட்டார மலை பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, மலை பகுதியில் பேரல்கள் மற்றும் பிளாஸ்டிக் கேன்களில் பதுக்கி வைத்திருந்த 2600 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 100 லிட்டர் சாராயத்தை கண்டுபிடித்து கீழே கொட்டி அழித்தனர்.

மேலும், சாராயம் காய்ச்சுவதற்காக புதர்களில் வைத்திருந்த மூலபொருட்கள், அடுப்புகள் உள்ளிட்டவைகளை போலீசார் உடைத்து நொறுக்கினர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )