மாவட்ட செய்திகள்
அரசு பள்ளி ஆசிரியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1.29 லட்சத்தை மோசடியாக எடுத்த மர்ம நபர்.

அரசு பள்ளி ஆசிரியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1.29 லட்சத்தை மோசடியாக எடுத்த மர்ம நபர் குறித்து தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தெற்கு வீதியை சேர்ந்தவர் முத்துகுமரன் (51). அரசு பள்ளி ஆசிரியர். கடந்த 5ம் தேதி இவரது செல்போனில் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அந்த மர்மநபர் முத்துக்குமரனிடம் உங்களது வங்கி விவரங்களை புதுப்பிக்க வேண்டும். இல்லையென்றால் ஏ.டி.எம். கார்டு செயல் இழந்து போகும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு லிங் அனுப்பப்பட்டுள்ளது.

இதை உண்மை என்று நம்பிய முத்துகுமரன் உடனடியாக அந்த லிங்கை ஒபன் செய்து வங்கி எண், ஏ.டி.எம்.கார்டு எண், பாஸ்வேர்டு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பதிவேற்றம் செய்தார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 955 அபேஸ் செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த முத்துகுமரன் வங்கிக்கு சென்று கேட்டபோது போலியான குறுந்தகவலை நம்பி வங்கி விவரங்களை பதிவேற்றம் செய்ததால் மர்ம நபர் பணத்தை மோசடி செய்து எடுத்தது தெரியவந்தது.
இது குறித்து அவர் தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
