BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் தங்கி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வு கோவில்பட்டி செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் நடந்தது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் தமிழகத்தில் திருநெல்வேலி ராமநாதபுரம் திருச்சி அரியலூர் மதுரை ஆகிய இடங்களில் விளையாட்டு விடுதிகள் செயல்படுகின்றன. இந்த விளையாட்டு விடுதிகளுக்கான ஹாக்கி வீரர்கள் தேர்வு கடந்த 3 நாட்களாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் கடந்த 6-ம் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது.

முதல் நாள் 7, 8-ம் வகுப்பு வீரர்கள் தேர்வு நடந்தது. 7-ம் தேதி 9-வது வகுப்புக்கும், நேற்று 11-ம் வகுப்பு வீரர்கள்ம் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் தமிழகம் முழுவதிலும் இருந்து 387-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். தேர்வுக் குழு உறுப்பினர்களாக மாவட்ட விளையாட்டு அதிகாரி எல்.லெனின், ஏ.முருகன், விளையாட்டு விடுதி ஹாக்கி பயிற்சியாளர் என்.முத்துக்குமார் R.சிவக்குமார் எம்.தினேஷ்குமார் தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழக செயலாளர் சி.குரு சித்ர சண்முக பாரதி மற்றும் முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் பி.அஸ்வின் ஆகியோர் செயல்பட்டனர்.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக விளையாட்டு விடுதிக்கான தேர்வு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )