மாவட்ட செய்திகள்
ஒட்டன்சத்திரம் -75ஆவது உலக சுகாதார தினவிழாவை முன்னிட்டு மருத்துவ மனையைச் சுற்றி மரக்கன்றுகள் நடும் விழா.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் 75 ஆவது உலக சுகாதார தின விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தலைமை மருத்துவர் டாக்டர் . தமிழ்ச்செல்வி தலைமை வகித்து இந்த ஆண்டின் குறிக்கோளான நமது கிராமம் நமது ஆரோக்கியம் என்ற தலைப்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த விழாவில் ஐ.எம் ஒட்டன்சத்திரம் கிளை செயலாளர் டாக்டர் ஆசைத்தம்பி முன்னிலை வகித்து பேசினார். விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சதீஷ் குமார் வரவேற்று பேசினார். மேலும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஒட்டன்சத்திரம் நகராட்சி தலைவர் திருமலைச்சாமி கலந்து கொண்டு உரையாற்றி சுத்தமான காற்று, சுத்தமான தண்ணீர், இயற்கை வளங்களை பாதுகாப்பது போன்ற கருத்துக்கள் பொது மக்களைடையே எடுத்துரைக்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் இறுதியில் தலைமை மருத்துவர் கோபால் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை செவிலியர் கண்காணிப்பாளர் மும்தாஜ் சிறப்பாக செய்திருந்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
