மாவட்ட செய்திகள்
மூலகங்கள் ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீராமநவமி விழா!

வேலூர் மாவட்டம்,காட்பாடி வட்டம், மூலகசம் கிராமத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய கற்பாறையில் ஸ்ரீ வியாசராயர் பிரதிஷ்டை செய்தருளிய அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பாறையில் தென்பட்டது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த 9 கிராம பொதுமக்கள் பக்தி பரவசமாக தொடர்ந்து வழிபட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது அங்கு மிகச் சிறப்பாக ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பெருமாள் கோயில் செயல்படுகிறது. ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு கடந்த 02.04.22 சனிக்கிழமை முதல் சைத்ர நவராத்திரியை முன்னிட்டு தினமும் காலையில் சிறப்பு அபிஷேகமும், பூஜையும், ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது. இதில் 9ம் நாள் 10.04.22 ஞாயிற்றுக்கிழமை (இன்று) ஸ்ரீ ராம நவமி அன்று அகண்ட ராம நாம பஜனைகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் காட்பாடி வட்டம், மூலகசம் கிராமத்தில் 500 ஆண்டுகளுக்கு முன்பு பாறையில் தென்பட்ட ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பெருமாள் கோவில் வளாகத்தில் ஸ்ரீராமநவமி சிறப்பு பூஜை நடைபெறுகிறது. எனவே பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சுவாமியின் அருள் பெறு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஸ்ரீராமநவமி விழாவுக்கான ஏற்பாடுகளை 9 கிராம பொது மக்கள், நிர்வாகிகள் விமரிசையாக செய்து வருகிறார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
