BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

செங்கம் அடுத்த குப்பநத்தம் அணை பாசன வசதிக்காக திறப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு இரண்டாம் போக நெல் பயிரிட்டு கதிர் வரும் நேரத்தில் கருகும் அபாயம் இருப்பதாக தமிழக அரசுக்கு குப்பநத்தம் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் இன்று குப்பநத்தம் அணை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

தமிழக அரசு விவசாய பாசனத்திற்கு குப்பநத்தம் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட போவதாக அறிவித்து அதன்படி குப்பநத்தம் நீர்த்தேக்கத்தில் இருந்து 47 ஏரிகளுக்கு பாசனத்திற்காக 09-04-2022 முதல் 27-04-2022 வரையில் 18 நாட்களுக்கு நாளொன்றுக்கு 265 கன அடி வீதமும் 28 – 04 – 2022 முதல் 05 – 05 – 2022 வரை 8 நாட்களுக்கு நாளொன்றுக்கு 240 கன அடி வீதமும் மொத்தம் 26 நாட்களுக்கு 578.12 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விட ஆணை வ

ழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் சிக்கனமாக நீரைப் பயன்படுத்தி விவசாயத்தை பெருக்கி கொள்ள வேண்டும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வவேலு கேட்டுக் கொண்டார்.

மேலும் துணை சபாநாயகர் பிச்சாண்டி மாவட்ட ஆட்சியர் முருகேஷ் திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )