மாவட்ட செய்திகள்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து திரூப்பூரில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கண்ணீர் அஞ்சலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை கட்டுப்படுத்த கோடி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கேஸ் சிலிண்டரில் அடுப்பு வைத்து கண்ணீர் அஞ்சலி பதாகைகள் வைத்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் நேரத்தில் உலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் ஏற்றப்படுவதாகவும், விலை வாசி உயர்வு கடுமையான பொருளாதார சுமையில் சிக்கி தவிக்கும் மக்கள் மீது தமிழக சொத்து வரியை அபரிமிதமாக உயர்த்தி உள்ளது.

மக்களின் நிலையை கருத்தில் கொண்டு வரி சுமையை கடடுப்படுத்தி , விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி பதாகைகள் வைத்து அடுப்பில் சமைப்பது போல நூதன முறையில் கண்ணீர் அஞ்சலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
