மாவட்ட செய்திகள்
கடாரம் கொண்டான் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் வட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நியாயவிலை கடைகள் 90 உள்ளது. நடப்பு ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் நகர்வு செய்யும் பணியானது கிடாரம் கொண்டான் கிராமத்தில் இருக்கும் கிடங்கிலிருந்து நடைபெற்று வருகிறது. மேற்படி நகர்வு பணியினையும், ஏப்ரல் மாதத்திற்கு அனுப்பிவைக்கப்படும் அரிசி, கோதுமை, துவரை, பாமாயில் ஆகியவற்றின் தரம் குறித்தும், ரம்ஜான் பண்டிகையினை முன்னிட்டு முஸ்லிம் பெருமக்களுக்கு வழங்கப்படும் பச்சரிசியின் தரம் குறித்தும், தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு ஆய்வு செய்தார்.


எதிர்வரும் தமிழ் புத்தாண்டிற்கு அனைத்து குடும்பத்தாரர்களுக்கும் பாமாயில், பச்சரிசி, சர்க்கரை, துவரை ஆகியவை தட்டுப்பாடின்றி கிடைத்திட உரிய நடவடிக்கையும் எடுக்குமாறும் கிடங்கு பொறுப்பாளர்களிடம் அறிவுறுத்தினார். ஆய்வின்போது கிடங்கில் எழுத்தர்கள் அமீர், மணிகண்டன் மற்றும் நகர்வு எழுத்தர்கள் வித்யாசாகர், பிரதீப் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
