மாவட்ட செய்திகள்
உடுமலையை அடுத்த பூலாங்கிணறு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக உடுமலை போலீசாருக்கு ரகசிய தகவல்.

உடுமலையை அடுத்த பூலாங்கிணறு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக உடுமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் எஸ்ஐ சம்பத்குமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது பெருமாள் கோவில் அருகில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.இதனையடுத்து அந்த வீட்டிலிருந்த பெரியசாமி என்பவரது மனைவி கார்த்தீஸ்வரி(வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கார்த்தீஸ்வரிக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது? அவர் யார் யாருக்கு விற்பனை செய்தார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
