மாவட்ட செய்திகள்
திருச்சிலுவை கல்லூரி மற்றும் புரோவிஷன் குழந்தைகள் எலும்பியல் மறுவாழ்வு மையம் இணைந்து “பெண்ணின் ஆரோக்கிய நல இயல் “பற்றிய விழிப்புணர்வு முகாம்.

திருச்சிலுவை கல்லூரி மற்றும் புரோவிஷன் குழந்தைகள் எலும்பியல் மறுவாழ்வு மையம் இணைந்து “பெண்ணின் ஆரோக்கிய நல இயல் “பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது . முகாமில் திருச்சிலுவைக் கல்லுரி சமுகப்பணித் துறை மாணவி அலீனா தங்கச்சன் தொகுத்து வழங்கினார்.

இதில் திருமதி. வித்யா , புரோவிசன் சிறப்பு கல்வியாசிரியர் பெண்கள் எவ்வாறு ஆரோக்கியமாகவும் , சுத்தமாகவும் இருக்க வேண்டும் என்று எடுத்துரைத்தனர்.அதனைத் தொடர்ந்து தென்ஆப்பிரிக்காவிலிருந்து வருகை புரிந்த அக்குபிரஷர் சிகிச்சையாளர் பிரேமா பெண்களுக்கு இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு சில உடற் பயிற்சி கற்றுக் கொடுத்தார்.சுமார் 60க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
