மாவட்ட செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி சி.எஸ்.ஐ பாஸ்டரேட் சபையில் குருத்தோலை பவனி நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி சி.எஸ்.ஐ பாஸ்டரேட் சபையில் குருத்தோலை பவனி நடைபெற்றது-இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலை ஏந்தி ஜெப பாடல்கள் பாடி ஊர்வலமாக தேவாலயத்திற்கு வந்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்பிப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம்,இந்த தவ காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுஷ்டிக்கப்படுகிறது,புனித வாரத்தின் தொடக்க நாளான இன்று குருத்தோலை ஞாயிறு திருநாள் நிகழ்ச்சியாக நடைபெற்றது,இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முன்னதாக ஜெருசலேம் நகரின் வீதிகளின் வழியாக ஏசுவை ஒரு கழுதையின் மேல் அமர்த்தி ஊர்வலமாக அழைத்து வந்தனர், அப்போது வழிநெடுகிலும் மக்கள் கையில் ஓலிவ் இலைகளை பிடித்து ஓசன்னா பாடல்களைப் பாடினர் இந்த நிகழ்ச்சியை நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை திருநாள் நடைப்பெறும்,அதேபோல் குமரிமாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று காலை குருத்தோலை பவனி நடைபெற்றது,குறிப்பாக பழமையான வடசேரி சி.எஸ்.ஐ பாஸ்டரேட் சபையில் குருத்தோலை பவனி நடைப்பெற்றது, ஆலயத்தை சுற்றி வீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி ஜெப பாடல்களைப் பாடி கலுங்கடி பகுதியோடு தேவாலயத்திற்கு வந்தனர்,பின்னர் ஆலயத்தில் குருத்தோலை அலங்காரத்துடன் தேவாலயம் காட்சியளித்து,பவனி வந்த கிருஸ்தவர்கள் ஆலயத்தில் திருப்பலி பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்,இதில் சபை போதகர் ரஸ்கின் ராய் ,பால்மர் ஜெயசிங் செயலாளர், சார்லஸ் செல்வன் பொருளாளர், ஜாண் ராபர்ட் கணக்கர்,கனி மற்றும் கோயில் நிர்வாகிகள் குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர், மேலும் வரும் வெள்ளி புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.