மாவட்ட செய்திகள்
ஆம்பூர் அடுத்த பாலூர் கிராமத்தில் கிறிஸ்துவ தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு விழா.
ஆம்பூர் அடுத்த பாலூர் கிராமத்தில் கிறிஸ்துவ தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு விழாவினை முன்னிட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குருத்தோலைகளை கையில் ஏந்தி ஓசன்னா ஓசன்னா பாடலைப்பாடி வீதி வீதியாக ஊர்வலமாக வந்தனர்.
தமிழகம் முழுவதும் இன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் கிராமத்தில் அமைந்துள்ள தூய பவுல் ஆலய திருச்சபையில் குருத்தோலை ஞாயிறு விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதில் கிறிஸ்துவ பெருமக்கள் புத்தாடை மற்றும் வெள்ளை உடைகளை அணிந்து கைகளில் குருத்தோலைகளை ஏந்தி கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஓசன்னா ஓசன்னா என்ற பாடல் பாடிக் கொண்டு ஊர்வலமாக வந்தனர் பின்னர் திருச்சபை வந்தடைந்து சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சபை போதகர் ஆனந்தராஜன் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார் இதில் கிறிஸ்துவ பெருமக்கள் கலந்துகொண்டு கடவுளுடைய ஆசீர்வாதத்தை பெற்று சென்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.