மாவட்ட செய்திகள்
ஸ்ரீ அகோர கபால பைரவருக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் !

காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் ஸ்ரீ அகோர காளி பீடம் அமைந்துள்ளது . இதில் அங்காளம்மன் கோயிலுக்கு அருகில் ஸ்ரீ அகோர கபால பைரவருக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டது. ஸ்ரீ கபால பைரவருக்கு தனி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது இதையடுத்து ஜெய கபால பைரவருக்கு யாகசாலை பூஜை நடந்தது தொடர்ந்து கலசங்கள் கரி கோலம் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட புனிதநீர் ஸ்ரீ கபால பைரவருக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை எட்டு மணிக்குப் பிறகு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை ஸ்ரீ அகோர காளி பீட நிறுவனர் ஸ்ரீ அகோரி ராம்ராஜ் தலைமை வகித்து நடத்தினார். அவருடன் பெங்களூருவைச் சேர்ந்த ராணுவத்தைச் சேர்ந்த சுபேதார் சுந்தரவடிவேலு மகேந்திரன் ஆகியோர் முன்னின்று அஷ்டபந்தன கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ கபால பைரவரின் அருளாசியை பெற்றனர். இவர்களுடன் ஸ்ரீ கபால பைரவரின் மகா கும்பாபிஷேகத்தில் சரத்குமார், மஞ்சுநாத், சத்தியநாராயணன், மணிகண்டன் ,ஸ்ரீதர், தனசேகர், தருண் மற்றும் அப்பகுதி மக்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .அதைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது. இந்த அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பாபவிமோசனம், செல்வம் பெருகும் ,கஷ்டம் இன்றி குடும்பம் செல்லும் என்பது ஐதீகம். கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் தீட்சை பெற்ற ஸ்ரீ அகோரி ராம்ராஜின் அருளாசியையும் பெற்றுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
