மாவட்ட செய்திகள்
நாங்களும் மனுஷங்க தானே! ஆட்சியரிடம் திருநங்கைகள் உருக்கம்!

நாங்களும் மனுஷங்க தானே! ஆட்சியரிடம் திருநங்கைகள் உருக்கம்!
ஆறுதல் கூறிய ஆட்சியர்!
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா ஊசூர் அடுத்த புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திருநங்கைகள் நால்வர் சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுமனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்தனர். பல முறை போராடி வீட்டுமனை தர ஆட்சியர் உத்தரவிட்டிருந்த நிலையில் பல நாள் போராட்டம் விடிவுக்கு வந்ததே என்று மகிழ்ச்சியாயிருந்த அவர்களின் விடியலுக்கு முட்டுக்கட்டையாய் அப்பகுதி மக்களின் பெயரைச் சொல்லி சிலர் இவர்களுக்கு வீடு தரக்கூடாது என்று தடை போட முயன்று வருவதாகவும் அவர்களின் மிரட்டலிலிருந்து பாதுகாப்பு கேட்டும் எங்களுக்கு வீட்டு மனை ஒதுக்கி தாருங்கள் நாங்களும் மனுஷங்கதானே என்று ஆட்சியரிடம் கதறி அழத்தொடங்கினர். பதறிய ஆட்சியர் அழ வேண்டாம். நாங்கள் இருக்கிறோம். அரசும் ,சட்டமும் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. நான் பார்த்துகொள்கிறேன் என எல்லோரையும் ஆசுவாசப்படுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து உடனடியாக இவர்களுக்கு பட்டா வழங்க வழி செய்யுங்கள் என உத்தரவிட்டார். அவர்களை உடனடியாக மகளிர் சுய உதவிக்குழுக்களில் இணைத்து அவர்களுக்கு தேவையான உதவியை செய்யுங்கள் எனவும் உத்தரவிட்டார். ஆட்சியரின் இந்த கனிவுமிக்க இச்செயலால் அவர்கள் ஆட்சியருக்கு கண்ணீருடன் நன்றியை தெரிவித்து சென்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
