BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

பஞ்சு மில் தொழிலாளர்களின் பிடித்தம் செய்யப்பட்ட பணிக்கொடை வழங்க வலியுறுத்தி விசிக உட்பட பல்வேறு கட்சியினர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் தொழிலாளர்கள் மனு அளித்தனர்.

விடுதலை சிறுத்தை கட்சியின் காஜாமலை பகுதிச் செயலாளர் கலியமூர்த்தி என்ற கபிலன், தேசிய பஞ்சு மில் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி ஜம்புநாதன்,
காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் நிர்வாகி மருதமுத்து, திராவிட கழக முன்னேற்ற கழகத்தின் நிர்வாகி வடிவேல் ஆகியோர் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவை சந்தித்து மனு அளித்தனர் அம்மனுவில் திருச்சி மாவட்டம், ராம்ஜிநகர் பகுதியில் உமா பரமேஸ்வரி பஞ்சு மில் 80ஆண்டுகளாக இயங்கி வந்தது. கடந்த 2007ஆம் ஆண்டு முதல் நிர்வாக சீர்கேடு காரணமாக இயங்கவில்லை.


மேலும் பஞ்சாலையை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாங்கிய கடனுக்காக வங்கி நிர்வாகம் மில்லுக்கு சீல் வைத்தனர்.
இந்த ஆலையில் பணி செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் பணிக்கொடை வழங்கவில்லை. இதுதொடர்பாக நீதிமன்றத்திற்குச் சென்றபோது நீதிமன்றம் உடனடியாக பஞ்சாலை சொத்துக்களை விற்று தொழிலாளருக்கு உடனே பணி கொடைகளை வழங்க வேண்டும் என உத்தரவிட்டு இதுவரை வழங்கவில்லை இதுதொடர்பாக கடந்த 16 ஆண்டுகளாக தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உடனடியாக பணிக்கொடை பெற்றுத்தர வலியுறுத்தியும் மனு அளித்தனர். இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நிர்வாகிகள் தில்லைமுரசு, துரை, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )