மாவட்ட செய்திகள்
காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் 300
நல்லொழுக்க மாணவர்களுக்கு இலவச வீட்டு மனை: தனியார் பள்ளி அசத்தல்!
பத்தாண்டுகள் தொடர்ச்சியாக படிப்பில் முதலிடம், ஒழுக்கம் , கீழ்ப்படிதல் என சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு வீட்டுமனை வழங்கி பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி நிர்வாகம் புதுமை படைத்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே பள்ளி மாணவ, மாணவிகள் செய்கைகள் குறித்த செய்தி மற்றும் வீடியோக்களால் மாணவர் ஓழுக்கமின்மை குறித்த சர்ச்சைகள் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் செயல்பட்டு வரும் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி எனும் தனியார் பள்ளியில் சுமார் 4500 மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். இப்பள்ளியில் பயிலும் மாணவ , மாணவிகளுக்கு முதலில் சொல்லும் அறிவுரை, உடன் பயிலும் அனைவரும் நம்முடைய சகோதர, சகோதரிகள் என எண்ண வேண்டும் என்பதுதான் அது.
பெற்றோர், ஆசிரியர்களுக்கு கீழ்படிதல், பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தலின்படி ஓழுக்கம், சிகை அலங்காரம், வரிசையில் செல்லுதல் உள்ளிட்டவைகளுக்கு சிறந்த உதாரணம் என இப்பள்ளியை கூறலாம். இவைகளை மீறுபவர்களுக்கு இப்பள்ளியில் இடம் இல்லை. மாணவர் மற்றும் பெற்றோரிடம் கண்டிப்பு காட்டுவதால் கல்வியில் சிறந்து விளங்கி அரசு தேர்வில் 100% தேர்ச்சி பெற்று வருகின்றனர்.
கட்டளைகளை முறையாக மாணவ, மாணவிகள் பின்பற்றி நடப்பதால் ஆண்டு தோறும் பெற்றோர்களுடன் விமான டிக்கெட் வழங்கி சுற்றுலா செல்ல மாணவர்களை ஊக்குவித்து வருகிறது பள்ளி நிர்வாகம். தற்போது பத்து வருடங்களாக தொடர்ச்சியாக முதலிடம், பள்ளிக்கு விடுமுறையின்றி வருதல், ஒழுக்கம் ஆகியவைகளில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளில் 300 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வீட்டுமனை பரிசாக வழங்கும் விழா.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.