மாவட்ட செய்திகள்
திண்டுக்கல் -மாநகராட்சி புதிய சொத்து வரியை குறைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக மனு.

திண்டுக்கல் மாநகராட்சியின் புதிய சொத்து வரியை குறைக்கக்கோரி மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாநகராட்சி மேயர் இளமதி மற்றும் ஆணையர் சிவசுப்ரமணியம் இது பற்றி பரிசீலனை செய்யப்படும் என பெற்றுக் கொண்டனர். மேலும் மார்க்சிஸ்ட் கட்சி நகர செயலாளர் ஆசாத் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதில் தமிழக அரசு அறிவித்த வரி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி கடிதம் கொடுக்கப்பட்டது. மேலும் ஏழை ,எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனக்கூறி இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
