BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர் பெரிய கோவில் தேரோட்டம் நாளை நடைபெற உள்ளதையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது இந்த ஆண்டு சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது நாளை மேல வீதியில் இருந்து பெரிய கோவில் தேரோட்டம் தொடங்குகிறது.

வடக்கு வீதி கீழ வீதி தெற்கு வீதி வழியாக மீண்டும் மேலவீதிக்கு நிலைக்கு வர உள்ளது நாளை தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் நான்கு வீதிகளில் சாலைகள் அமைக்கப்பட்டு தேர் செல்வதற்காகவும் நிறுத்தம் செய்யும் இடங்களை கண்டறியும் வகையில் வெள்ளை நிற கோடுகள் வரையப்பட்டு நான்கு வீதிகளிலும் தூய்மை பணிகள் செய்யப்பட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )