BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருச்சியில் கோவிலில் 3 கலசங்கள் திருடு போனது! போலீஸ் விசாரணை!!

அரை ஏக்கர் நிலத்துக்கு எம்புட்டு சண்டை; திருச்சி அரசியல்வாதிகளால்  ராணுவத்துக்கு வந்த சோதனை! | Army provided half acre of land to build a  flyover in Trichy - Tamil Oneindia

திருச்சியில் கோவில் கோபுரத்தின் பழமையான ஐம்பொன் கலசங்கள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எல்லையம்மன் கோவில் மணப்பாறையை அடுத்த சித்தாந்தம் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் கோபுரத்தில் 5 கலசங்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பழுது காரணமாக அக்கிராம மக்கள் அகற்றி உள்ளனர்.

மீதம் 4 கலசங்கள் கோபுரத்தில் இருந்துள்ளன. அவற்றை திருட முயற்சித்த கொள்ளையர்கள் 3 கலசங்களை திருடியுள்ளனர். 4வது கலசத்தை அவர்கள் அகற்ற முயற்சித்தபோது முடியாமல் போகவே அதை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது.

கோவில் கலசங்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து கிராம மக்கள், போலீசில் புகார் அளித்துள்ளனர். வழக்கைப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்கள் தேடி வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )