BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

அரசு தடை செய்த பொருட்களை தாராளமாக புழக்கத்தில் விடும் சுகாதார ஆய்வாளர்!

வேலூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்தில்  சுகாதார ஆய்வாளராக லூர்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவர் பொறுப்பேற்ற நாள் முதல் இரண்டாவது மண்டலம் கந்த கோலமாக அதிகார துஷ்பிரயோகத்தில் சிக்கி சீரழிய தொடங்கியுள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் வேலூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள், போதைப் பொருட்களான ஹான்ஸ் பான்பராக் போன்ற போதை ரகங்களும் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வேலூர் மாநகராட்சி சுகாதார அலுவலராக பணியாற்றி ஒன்னாவது மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார் டாக்டர் சிவகுமார். சிறந்த சுகாதார அலுவலருக்கான விருதினை மாவட்ட ஆட்சியரிடம் பெற்றார் டாக்டர் சிவக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது .அவர் பணியாற்றி விட்டுச் சென்ற இடத்தில் அடுத்து பணிக்கு வந்த சுகாதார அலுவலர் லூர்து தான்தோன்றித்தனமாக பணத்திலேயே குறியாக செயல்படுகிறார் . குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனறால் இவர் நான் யாரிடமும் பணம் வாங்குவதும் இல்லை, யாருக்கும் பணம் கொடுப்பதும் இல்லை என்று ஏதோ அரிச்சந்திரன் வீட்டு எதிர் வீட்டில் குடியிருப்பவர் போன்று தனக்குத் தானே பெருமையை கூட்டிக் கொள்ளும் வகையில் தன் காலை தானே தொட்டு கும்பிட்டு வருகிறார். அதேபோன்று பணிக்கு வராத துப்புரவு பணியாளர்களை பணிக்கு வந்ததாக கணக்கு காண்பித்து வருகைப்பதிவேடு போட்டு வருகிறார். அத்துடன் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து மாநகராட்சி பட்டியில் அடைக்காமல் மாடு ஒன்றுக்கு தலா ரூ.5 ஆயிரம் வாங்கிக்கொண்டு மாடுகளை உரியவர்களிடம் ஒப்படைத்து விடுகிறார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )