BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கல்லணை கால்வாயில் இருந்து கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யகொண்டான் நீட்டிப்பு வாய்க்காலிற்கு பாசன வசதி ஏற்படுத்திடுக! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் ஒன்றிய மாநாட்டில் தீர்மாணம்.

தஞ்சாவூர்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் ஒன்றிய 4-வது மாநாடு ஒன்றிய செயலாளர் இரா.இராமச்சந்திரன் தலைமையில் செங்கிப்பட்டி ஓவியா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.மாநாட்டு அரங்கத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த கொடியினை ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம் ஏற்றி வைத்தார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் த.இந்திரஜித் மாநாட்டினை துவக்கி வைத்து உரையாற்றினார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற வேலை அறிக்கை,அமைப்பு நிலை அறிக்கை,வரவு செலவு அறிக்கைகளை ஒன்றிய செயலாளர் இரா.இராமச்சந்திரன் சமர்பித்து உரையாற்றினார்.மாநாட்டினை வாழ்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி,கும்பகோணம் ஒன்றிய செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.மாநாட்டில் 21 பேர் கொண்ட புதிய ஒன்றியக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டு,புதிய ஒன்றிய செயலாளராக தோழர் ஆர்.ஆர்.முகில் (வயது-27) ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.


தோழர்கள் கே.செந்தில்குமார் (வயது-44) மற்றும் ஆர்.சதீஷ்குமார் (வயது-34) துணைச் செயலாளராகவும் எஸ்.கார்த்தி (வயது-38) பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.மாநாட்டில், கல்லணை கால்வாயிலிருந்து உய்யக்கொண்டான் நீட்டிப்பு, கட்டளை மேட்டு வாய்க்காலிற்க்கு நீர் கொண்டுவந்து ஆச்சாம்பட்டி ஐயனார் அணைக்கட்டில் நீர் சேமிக்க திட்ட வரைவு அறிக்கையை தயார் செய்து நடப்பு நிதி ஆண்டிலேயே நிதி ஒதுக்கி பணிகளை துவக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பூதலூரில் அரசு கருவூலம்,சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும், மூன்று மாவட்டங்களுக்கு மையமாக உள்ள புகழ்பெற்ற T.B.சானிடோரியம் மருத்துவமனையை பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், சானூரப்பட்டி அருள்மிகு அய்யனார் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்லணையை ஒழுங்கமைத்த ஆங்கிலேய பொறியாளர் சர்.ஆர்தர் காட்டன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டி அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும், திருக்காட்டுப்பள்ளி புறவழிச்சாலை அமைக்கும் பணிகளை உடனே தொடங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )