மாவட்ட செய்திகள்
தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவியின் ஆடியோ மற்றும் நகராட்சி தலைவர் பதவி விவகாரம் விளக்கம் அளித்து தேனியில் தங்கத்தமிழ்செல்வன் பேட்டி.
தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவியின் ஆடியோ மற்றும் நகராட்சி தலைவர் பதவி விவகாரம் விளக்கம் அளித்து தேனியில் தங்கத்தமிழ்செல்வன் பேட்டி தேனியில் தங்கத்தமிழ்செல்வன் பேட்டி.

நகராட்சித் தலைவி ரேணு பிரியா மற்றும் திமுக கவுன்சிலர் சந்திரகலா ஈஸ்வரி ஆகியோரின் ஆடியோ விவகாரத்தில், அவர்கள் பேசியது போல் எந்த பணமும் மாவட்டச் செயலாளரான என்னிடம் கொடுக்கப்படவில்லை. அதை தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவியான ரேணு ப்பிரியாவும் உறுதியளித்துள்ளார். ஆடியோவில் பேசிய சம்பந்தப்பட்ட திமுக கவுன்சிலர் மற்றும் நகராட்சி தலைவி ஆகியோர் தவறு செய்திருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது கட்சி ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவி திமுக சார்பில் காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்டது. அதில் திமுக கவுன்சிலர் நகராட்சித் தலைவராக பொறுப்பேற்று உள்ளார். இன்னும் தலைமை கழகத்தின் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த பேச்சுவார்த்தை முடியும் வரையில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக உறுப்பினர் ஆன ரேணு பிரியவே நகராட்சித் தலைவராக தொடர்வார். ஆடியோ விவகாரம் மற்றும் தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவி ஆகியவற்றில் கட்சித் தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவதாக அனைத்து திமுக கவுன்சிலர்களும் உறுதி அளித்துள்ளனர்,” என்று தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ்செல்வன் தேனியில் செய்தியாளர்களுக்கு பேட்டி.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
