மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்- 75ஆவது சுதந்திர பெருநாள் அமுதவிழாவை முன்னிட்டு மினி மாரத்தான் ஓட்டம்.

திண்டுக்கல் மாநகராட்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 75வது சுதந்திர பெருநாள் திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறை- மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்திய மினி மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.விசாகன் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர்.உடன்
திண்டுக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜோஸ் பாத்திமா மற்றும் பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த தடகள மாணவ ,மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
