BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருச்சியில் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளின் ஆசையை நிறைவேற்றிய விஜய் ரசிகர்கள்.

தமிழகத்தில் இன்று நடிகர் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் உற்சாகமாக திரைப்படத்தைப் பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி முன்னாள் மாவட்ட தலைவரான ஆர்.கே.ராஜா ஒவ்வொரு வருடமும் விஜய் பிறந்த நாளன்று திருச்சியில் செயல்படும் கங்காரு காப்பகத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், பார்வையற்றவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உணவு வழங்கி வருகிறார்.
இன்னிலையில் இம்முறை விஜய் பிறந்த நாளன்று நலத்திட்ட உதவி வழங்கியபோது காப்பகத்தை சேர்ந்தவர்கள் விஜய் படத்தை காண வேண்டுமென கூறினர். அப்போது அடுத்த திரைப்படம் வரும் பொழுது கட்டாயமாக அழைத்துச் செல்வதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி அவள் ஆசையை நிறைவேற்றும் வகையில் இன்று பீஸ்ட் திரைப்படம் வெளியானதையடுத்து திருச்சி மாவட்ட விஜய் ரசிகர்கள் சார்பில் விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் கங்காரு காப்பகத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் இதன் ஒரு பகுதியாகமாற்றுத் திறனாளிகள், பார்வையற்றவர்கள் என 50க்கும் மேற்பட்டோர் பீஸ்ட் திரைப்படம் பார்க்க வாகனங்கள் மூலம் அழைத்து வந்தனர்.


முன்னதாக திரையரங்கத்தின் வாயிலில் முன்பு அமர்ந்து முதியவர்கள் பார்வையற்றவர்கள் மாற்றுத் திறனாளிகள் என அனைவரும் செல்பி எடுத்துக்கொண்டனர் மேலும் நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தை பார்க்க இருப்பது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )