மாவட்ட செய்திகள்
ஐந்து வயதில் இரண்டு உலக சாதனை, ஒரு கவுரவ டாக்டர் பட்டம், மூன்று உலக சாதனை புத்தகத்தில் இடம்! வேலூரை கலக்கும் மழலை M.S. ரித்திகா!
கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி தி ஃபிரிட்ஜ் அறக்கட்டளை வேலூர் வாயிலாக சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வை வலியுறுத்தி 3 வயது குழந்தை M.S. ரித்திகா, காஞ்சிபுரத்தில் உள்ள ராஜ வீதிகள் வழியாக 3 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டார். அவருடைய சாதனை யுநீவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெகார்ட்ஸ், பியூச்சர் கலாம் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் மற்றும் ஜெட்லி புக் ஆஃப் ரெகார்ட்ஸ் போன்ற 3 உலக சாதனை புத்தகங்களில் அங்கீகரிக்கப்பட்டது. மேலும் இந்த சாதனையை ஊக்கம் அளிக்கும் வகையில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு (Child Welfare Committee) சார்பாக 2020 ஆண்டு அன்றிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி குழந்தைகளுக்கு (Brand Ambassador) பிராண்ட் அம்பாசிடர் பட்டத்தை வழங்கினார்.
மேலும் 26.03.2022 அன்று சர்வதேச தமிழ் பல்கலைகழகம் கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி சிறப்பித்தது.
மேலும் சென்ற 7ஆம் தேதி ஏப்ரல் 2022, அன்று உலக நல்வாழ்வு தினத்தை முன்னிட்டு செல்வி. M.S.ரித்திகா, சுகாதார சின்னங்கள் மற்றும் அதற்கு பயன்படும் கருவிகள், 51 படங்கள் மூலம் 3 நிமிடங்களில் அதன் பெயர்களை எளிதில் அடையாளம் கண்டு உடன் விடை கண்டார். இது இவரின் இரண்டாவது உலக சாதனையாக யுநீவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெகார்ட்ஸ், பியூச்சர் கலாம் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் அங்கீகரித்தது. அதன் சான்று, கேடயம், பதக்கம் மற்றும் நாளைய கலாம் விருதையும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் பாராட்டி வழங்கினார்.
மேலும் இதில் தி பிரிட்ஜ் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர். மதிவாணன் மற்றும் சசிகலா கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.