BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

அண்ணல் அம்பேத்கர் 132 ஆவது பிறந்தநாள் விழா சிலைக்கு தி.கா, கம்யூனிஸ்ட் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.

சட்டமேதை அம்பேத்காரின் 132 ஆவது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் அவரது உருவச் சிலைக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள், அம்பேத்கர் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் உருவச்சிலைக்கு திராவிட கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் தொழிலாளர் அணி மாநில செயலாளர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதரன் தலைமையில் சட்ட மேதை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் நிர்வாகிகள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )