BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் முதல் முறையாக தஞ்சை இடுகாடுகளில் கட்டணமில்லா இலவச உடலை எரியூட்டும் சேவை துவக்கம்.

தஞ்சை மாநகரில் ராஜகோரி, சாந்திவனம் மற்றும் மாறிகுளம் இடுகாடுகள் உள்ளன இங்கு இறந்தவர்களை எரியூட்டு வதற்கு மாநகராட்சி கட்டணமாக 2500 முதல் 3500 வரை வசூலிக்கப்பட்டு வந்தது.

ஏழை மற்றும் நடுத்தர பொதுமக்களால் சில சமயங்களில் இந்த தொகையை செலுத்த இயலாத நிலை ஏற்படுகிறது
ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடைபெறும் இறுதி நிகழ்வு ஒரு சுமுகமான எவ்வித இடையூறும் இன்றி நல்ல முறையில் நடைபெற வேண்டும் என்ற குறிக்கோளை கருத்தில்கொண்டு பொதுமக்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்காமல் உடல் எரியூட்டும் சேவை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாநகராட்சி பராமரிப்பில் உள்ள சாந்திவனம் ராஜகோரி மற்றும் மாறிகுளம் இடுகாடுகளில் நடைபெறும் அனைத்து உடல் தகனம் கட்டணம் இல்லாமல் இலவசமாக எரியூட்டும் சேவை இன்று தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனால் துவக்கி வைக்கப்பட்டது.

இதுகுறித்து மேயர் சன் ராமநாதன் கூறுகையில் தஞ்சாவூர் மாநகராட்சி பராமரிப்பில் உள்ள மயானங்களில் நடைபெறும் அனைத்து உடல் தகனம் எவ்வித கட்டண தொகை வசூலிக்காமல் இலவசமாக செய்யப்படும்.

 

மேலும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகிலுள்ள சாந்திவனம் இடுகாட்டில் பெரும் தொற்று நோயால் இறந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து இந்து கிறிஸ்தவ இஸ்லாமிய சமுதாயங்களையும் சேர்ந்தவரின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் நினைவாக அங்கு நினைவுத்தூண் ஒன்று அமைக்கப்பட்டு இறந்தவர்களின் உறவினர்கள் மரியாதை செய்ய அனுமதிக்கப்படும் என கூறினார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )