மாவட்ட செய்திகள்
துணை ஆட்சியர் ராஜாமணி உயிரிழந்தது எப்படி?

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் பெண் துணை ஆட்சியர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும் அந்த விபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்ததுடன் நான்கு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்டத்தின் தனித்துணை ஆட்சியராக இருப்பவர் ராஜாமணி. இவர் நேற்று இரவு சங்கராபுரம் அருகே ஒரு சுப நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் கள்ளக்குறிச்சி சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் தாறுமாறாக ஓடியது.
அப்படி ஓடும்போது சாலையோரம் நிறுத்தப் பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் பயங்கரமாக மோதியது. அதற்குப் பிறகும் தாறுமாறாக ஓடிச்சென்ற அந்த கார் அங்கிருந்த மின்கம்பத்தின் மீது பலத்த சப்தத்தோடு மோதியது. இதில் மின்கம்பம் முறிந்து கார் மீது விழுந்ததால் துணை ஆட்சியர் ராஜாமணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
