BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

அதிமுக கழக அமைப்பு தேர்தல் நடைபெறுவதாக வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ அறிவித்துள்ளார்‌.

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் (16ம் தேதி) அ.தி.மு.க., கழக அமைப்பு தேர்தல் நடைபெறுவதாக வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ அறிவித்துள்ளார்.இதுகுறித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,அதிமுக கழக 3ம் கட்ட அமைப்பு தேர்தலை நடத்த வேண்டும் என்று அதிமுக.ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பகுதிகளுக்கான கழக அமைப்பு தேர்தல் (16ம் தேதி) கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே உள்ள எல்.வி.ஆர்., கட்டிடத்தில் நடைபெறுகிறது. நகர, ஒன்றிய, பேரூராட்சி கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த தேர்தல் நடைபெறும். கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ., தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தென்காசி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் தேர்தல் ஆணையாளர்களாக பங்கேற்று தேர்தலை நடத்துவார்கள்.தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் அந்தந்த பதவிகளுக்கு என நிர்ணயிக்கப்பட்ட தொகையினை செலுத்தி விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அந்த அறிக்கையில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தெரிவித்தனர்.

முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ஆய்வு:

நாளை அ.தி.மு.க., அமைப்பு தேர்தல் நடைபெறும் இடமான கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள எல்.வி.ஆர்., கட்டிடத்தில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., நேற்று ஆய்வு செய்தார். அமைப்பு தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்தார்.அப்போது, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,நகரச் செயலாளர் விஜய பாண்டியன்,மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி சத்யா, எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் சீனிராஜ், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காந்தி என்ற காமாட்சி ஒன்றியச் செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ்,ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி,ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகரமன்ற உறுப்பினர்கள் கவியரசன் வள்ளியம்மாள் மாரியப்பன்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், ஒன்றிய கவுன்சிலர் பிரியா குருராஜ்,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, கழகப் பேச்சாளர் பெருமாள்சாமி, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், மாவட்ட மாணவரணி துணை தலைவர் செல்வக்குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுதா என்ற சுப்புலட்சுமி, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், வழக்கறிஞர் சங்கர் கணேஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, பழனிகுமார்,முருகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )