BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

செங்கம் அருகே ஹோலி பண்டிகை கொண்டாட்டம்.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பிஎல் தண்டா பகுதியில் லம்பாடி இன மக்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் தங்கள் பாரம்பரிய திருவிழாவான ஹோலி பண்டிகையை மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வெகு விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இப் பண்டிகையை கொண்டாடாமல் இருந்த வேளையில் இந்த ஆண்டு நடைபெற்ற பாரம்பரிய ஹோலிப்பண்டிகை விழாவில் கடந்த ஒரு மாத காலமாக விரதம் இருந்து இந்த பண்டிகையை துவங்கினர். கோமதி அம்மன் தேர் திருவிழா மற்றும் சுவாலி பாரம்பரிய நடன நிகழ்ச்சி ஒளி தீபம் ஏற்றுதல் மற்றும் கலர் வண்ணம் பூசுதல் போன்ற நிகழ்ச்சிகளை வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

இந்த ஹோலிப் பண்டிகைக்கு திருவண்ணாமலைநாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை மற்றும் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் இந்த பண்டிகையின் முக்கிய நிகழ்வான கன்னி தீமூட்டி இப்பகுதியில் வசிக்கும் லம்பாடி இன மக்கள் வீட்டிற்கு ஒரு மரத்தை கொண்டு வந்து அதை ஓர் இடத்தில் வைத்து தீமூட்டி தீயினை திருமணமாகாத கண்ணி பெண்கள் சுற்றி வந்தால் திருமணம் ஆகும் என்றும் தங்கள் குடும்பத்தினருக்கு நல்லது நடக்கும் எனவும் நம்புவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )