BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

400 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்கள் காலத்தில் வடிவமைக்கப்பட்ட தஞ்சாவூர் பீரங்கி மேடு சீரமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக மாற்றப்படும் என தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கூறியுள்ளார்.

நமது வார்டு நமது மேயர் என்ற திட்டத்தின்படி தஞ்சை மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன் வார்டு வாரியாக தினமும் சென்று ஆய்வு பணிகளை செய்து வருகிறார் 15வது வார்டில் அதிமுக உறுப்பினர் காந்திமதி உடன் அந்த வார்டில் ஆய்வு செய்த மேயர், 400 ஆண்டுகளுக்கு முன்பு ரகுநாத நாயக்கர் மன்னராக இருந்தபோது தஞ்சையில் வடிவமைக்கப்பட்ட பீரங்கி மேடு உலக பிரசித்தி பெற்றது.

உலகத்தில் 5 வது பீரங்கியாக இது விளங்குகிறது கடந்த பல ஆண்டுகளாக தஞ்சை பீரங்கி மேடு சிதிலமடைந்து கிடக்கிறது தொல்லியல் துறைக்கு கடிதம் அனுப்பி பீரங்கி மேட்டை சீரமைப்பு செய்து சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் வந்து செல்லும் இடமாக மாற்றப்படும் என மேயர் சன்.ராமநாதன் உறுதியளித்தார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )