BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையின் போது பிடிபட்டது 9 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா போதைப்பொருள்!

வேலூர் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற Mahindra Bolero Max truck TN.24.AC.9541 சோதனையின்போது 1100 கிலோ குட்கா போதைப் பொருள் பறிமுதல்
செய்யப்பட்டது.
ஓசூர் பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் கைது செய்யப்பட்டு Mahindra Bolero Max truck TN.24.AC.9541 வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் தொடரும் குட்கா வேட்டை ஒரு மாத காலத்தில் 2000 கிலோ குட்கா போதைப் பொருள் பறிமுதல்.

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான காவலர்கள் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த Mahindra Bolero Max truck TN.24.AC.9541 வாகனத்தை மடக்கி சோதனை செய்தபோது சுமார் 50 மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ்,பான்மசாலா, கூல்லிப் உள்ளிட்ட 1100 கிலோ எடையுள்ள 9 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா போதை பொருட்கள் இருப்பது தெரிய வரவே பான்மசாலாவை பறிமுதல் செய்து வாகனத்தை ஓட்டி வந்த ஓசூர் பகுதியை சேர்ந்த கார்த்தி (28) என்பவர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கடந்த ஒரு மாத காலத்திற்குள் நான்கு முறை வாகன தணிக்கையின் போது 2000 கிலோ போதைப் பொருட்கள் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் சிக்கியிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )