BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

பேரணாம்பட்டு அருகே எருதுவிடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 35 பேர் படுகாயம்!

பேரணாம்பட்டு வாக்கு எண்ணும் மையத்தை மாற்றியமைக்க வலியுறுத்தல்

பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லலகுப்பம் கிராமத்தில் எருதுவிடும் விழா நடந்ததது. விழாவிற்கு குடியாத்தம் சப் – கலெக்டர் தனஞ்செயன் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார். பேரணாம்பட்டு தாசில்தாரர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.விழாவில் பேரணாம்பட்டு, வேலூர், குடியாத்தம், அணைக்கட்டு, ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து 335 காளைகள் அழைத்து வரப்பட்டன. அதில் 330 காளைகள் போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டன. .விழாவில் பொது மக்கள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். காளைகள் முட்டியதில் வேடிக்கை பார்த்தவர்களில் 35 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மேல் பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினரால் சிகிச்சையளிக்கப்பட்டது. இதில் 5 பேர் மேல்சிகிச்சைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விழாவில் அமலு விஜயன் எம்.எல்.ஏ.ஒன்றிய தி.மு.க.செயலாளர் பொகளூர் ஜனார்த்தனன், கிராம நிர்வாக அலுவலர் எம். ஜெயகுமார், ஆகியோர் கலந்துகொண்டு வெற்றிபெற்ற எருதுகளுக்கு முதல் பரிசாக ரூ 70 ஆயிரத்து 777, இரண்டாம் பரிசாக ரு.50 ஆயிரத்து 555, மூன்றாம் பரிசாக ரூ.44 ஆயிரத்து 444 அதன் உரிமையாளர்களிடம் வழங்கினர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )