BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருச்சி அருகே உள்ள தனியார் தொழிற்சாலை ஊழியர்களுக்கு – தீயணைப்பு துறை சார்பாக தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி.


திருச்சி மாவட்டம் சேதுராப்பட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தீத்தொண்டு நாளை முன்னிட்டு தீத்தடுப்பு பிரச்சாரம் மற்றும் தீயணைப்பு ஒத்திகை
திருச்சி தீயணைப்பு நிலையத்திலிருந்து உதவி மாவட்ட அலுவலர் கருணாகரன் தலைமையில் நிலைய அலுவலர் மெல்க்யூராஜா முன்னிலையில் நடைபெற்றது.
இந்த தீ தடுப்பு ஒத்திகையில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஏராளமான தொழிலாளர்களுக்கு எதிர்பாராவிதமாக தீ ஏற்படும்போது எப்படி தீயை அணைப்பது, எந்தெந்த தீ வகைகளுக்கு எப்படி தீயணைப்பு மேற்கொள்வது, தீ ஏற்படும்போது அதில் பாதிக்காமல் தொழிலாளர்களை காப்பாற்றுவது உள்ளிட்டவை குறித்து ஒத்திகை வழங்கப்பட்டது.


இந்த தீயணைப்பு ஒத்திகையில் திருச்சி தீயணைப்பு நிலைய சிறப்பு நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன் மற்றும்
வீரர்கள் பலர் கலந்து கொண்டு தொழிலாளிக்கு பயிற்சி அளித்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )