மாவட்ட செய்திகள்
திண்டுக்கல் -மத்திய, மாநில அரசின் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் சிவநாத பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் தினந்தோறும் உயர்ந்துவரும் பெட்ரோல் ,டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள் என அனைத்துத் தரப்பினரையும் அது முழுவதும் பாதிக்கிறது ஆகையால் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் மீதான வருமான வரியை குறைத்து விலையை குறைக்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைப் பொதுச் செயலாளர் விஜயகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரதீப், பாண்டியன் மாநகர செயலாளர் உள்ளிட்ட மாவட்ட ,மாநகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.