BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சையில் மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர் மாவட்டம் கீழஎசனை பகுதியை சேர்ந்தவர் திருமலை (86). இவர் மன அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதற்காக மாதாமாதம் தஞ்சை வந்து மாத்திரைகள் வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 14ம் தேதி தஞ்சைக்கு வந்த இவர் அரசு ஆய்வு மாளிகை எதிரில் புது ஆற்று கரையில் இருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து திருமலை மகன் வெங்கடேசன் தஞ்சை கிழக்கு போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வல்லம்: தஞ்சை அருகே வல்லம் டிகேஎஸ் நகரை சேர்ந்தவர் பிலவேந்திரன் (57). இவரது மகன் ராஜாஜி (22). கடந்த 11ம் தேதி வயிற்று வலி தாங்க முடியாமல் ராஜாஜி விஷம் குடித்தார். உடன் அவர் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து வல்லம் போலீசில் பிலவேந்திரன் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )