BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு.

தர்மபுரி மாவட்டம் கரியப்பன் அள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் உயிரிழந்ததையடுத்து அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தர்மபுரி மாவட்டம் பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், கரியப்பனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் உயிரிழந்துள்ளார்.

அவர் உயிரிழந்த செய்தியைக்கேட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் வேதனையுற்று, உயிரிழந்த விவசாயி கணேசன் குடும்பத்தாருக்கு, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட ஆணையிட்டுள்ளார்.

முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு, என்றென்றும் விவசாயிகளுக்கு உற்றதோழனாக இருக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )