மாவட்ட செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் அருகே பலத்த காயங்களுடன் தூக்கில் தொங்கிய நிலையில் வடமாநில வாலிபர் சடலம் மீட்பு.
ஸ்ரீபெரும்புதூர் அருகே பலத்த காயங்களுடன் தூக்கில் தொங்கிய நிலையில் வடமாநில வாலிபர் சடலம் மீட்பு.
கொலையாக இருக்க கூடுமோ என்று போலீசார் தீவிர விசாரணை.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பால் நெல்லூர் ஊராட்சியில் பால் நெல்லூர் சாலை, செலையனூர் சாலை செல்லும் ஜங்ஷனில் உள்ள காட்டுப்பகுதியில் வேப்பமரத்தில் வட மாநில வாலிபர் ஒருவர் சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில் உள்ளார் என ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது.
தகவலறிந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மரத்தில் சடலமாக தூக்கில் தொங்கிய வட மாநில வாலிபரின் கழுத்தில் மூன்று கயிறுகளால் இறுக்கி கட்டப்பட்டு உள்ளதாலும், உடலில் மற்றும் கால்களில் ரத்த காயங்கள் உள்ளதாலும் இது கொலையாக இருக்கக்கூடுமோ என்றும் இறந்தவர் யார் ?இவர் எங்கு தங்கி உள்ளார் ? என அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் தெருவிளக்கு அமைத்தாலும் விளக்குகளை கல்லெறிந்து தொடர்ந்து உடைத்து வருவதாகவும், குற்ற சம்பவங்கள் மற்றும் செல்போன் திருட்டு அதிக அளவில் நடைபெறுவதாகவும், கடந்த சில தினங்களுக்கு முன்பு வடமாநில வாலிபர்கள் தங்கியிருக்கும் அறைக்குள் சென்ற வாலிபர்கள் ஹோம் தியேட்டரைஉடைத்து நொறுக்கி விட்டு மூன்று செல்களை பிடிங்கி வந்துள்ளனர். அதேபோல் அப்பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா போதையில் வாலிபர்கள் நடமாடுவதாக அப்பகுதி மக்கள் மிகவும் வேதனையோடு கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.