மாவட்ட செய்திகள்
செங்கத்தில் விவசாயிகளுக்கு எதிராக அரசு ஊழியர்கள் செயல்படுவதை கண்டித்து பாதகொரடு அணிந்து பாதயாத்திரை விவசாயி கைது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு எதிராக அரசு ஊழியர்கள் செயல்படுவதாக கடந்த 5.4.2022 அன்று நடத்தப்பட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கை மனு வைக்கப்பட்டு அதனை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் சார்பில் வேண்டுகோள் வைத்தனர்.
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ராமஜெயம் என்ற விவசாயி அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து செங்கத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஆணிக் காலணி அணிந்து பாதயாத்திரையாக சென்று வாராந்திர மனு நாளில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்க விவசாயி ராமஜெயம் தனது பாதயாத்திரையாக சென்றவரை காவல்துறை தடுத்து கைது செய்து சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.