மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை மாவட்ட வழங்கல் அலுவலர், ரேஷன் அரிசி தரம் குறித்து ஆய்வு செய்த பிறகு தற்போது உள்ள நிலை.

யிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நான்கு தாலுக்காவிலும் ( மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம் மற்றும் சீர்காழி) மாவட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணன் (DSO) அவர்களின் ஆணைக்கிணங்க, வட்ட வழங்கல் அலுவலர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பலமுறை ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தரங்கம்பாடி தாலுக்கா, கிடாரன்கொண்டான் கிராமத்தில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் பலமுறை மாவட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணன், வட்ட வழங்க அலுவலர் பாபு ஆய்வுகள் மேற்கொண்டு தற்போது வண்டுகள் பூச்சிகள் இல்லாத சுத்தமான பொருட்கள் வழங்கப்பட்டு வருவதால் குடும்ப அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள் என்று கூறினார்கள்.

குடும்ப அட்டைதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு பத்திரிக்கை துறை சார்பாக ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று பார்க்க திட்டமிட்டோம்.
அறம் செய்திகள் சார்பாக எங்களது செய்தியாளர்களை கொண்டு நேரடியாக சில ரேஷன் கடைகளுக்கு சென்று விற்பனையாளர்களிடமும், அங்கு ரேஷன் பொருட்கள் வாங்க வந்த குடும்ப அட்டைதாரர்களிடமும் பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்தோம்.
அவர்கள் கூறியதாவது , ஏற்கனவே கொடுத்த பொருட்களைவிட தற்பொழுது மிகவும் தரமான முறையில் ரேஷன் பொருட்கள் தருகிறார்கள். நாங்கள் கடைகளில் கிலோ 45 ரூபாய் கொடுத்து அரிசி வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தோம், தற்பொழுது அதை முற்றிலும் நிறுத்திவிட்டு ரேஷன் கடைகளில் கொடுக்கும் அரிசியை மட்டுமே நாங்கள் சமைத்து சாப்பிடுகிறோம்.
இதனால் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் சேமிக்க முடிகிறது மற்றும் தரமான முறையில் பொருட்களை வழங்கும் அதிகாரிகளுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
