மாவட்ட செய்திகள்
உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் பேருந்தில் குரங்கு போல் தொங்கி செல்லும் கல்லூரி மாணவர்கள் சற்றும் பொருட்படுத்தாமல் பேருந்தை இயங்கி செல்லும் ஓட்டுநர்.


வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வரை செல்லக்கூடிய தனியார் பேருந்தில் ராணிப்பேட்டை மாவட்டம் திருவலம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆற்காடு வரை சென்று கல்லூரியில் படிக்கின்ற மாணவர்கள் தனியார் பேருந்தில் ஏறி பேருந்து படியில் மற்றும் பேருந்து பின்புறம் படியிலும் தொங்கியபடி உயிருக்கு ஆபத்தான பயனம் செய்வது பொதுமக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்குச் செல்வதற்கு நேரம் குறைவாக இருப்பதாலும் ஆபத்தான பயணம் செய்தால் கூட பேருந்து ஓட்டுனர் அவர்களை தடுத்து நிறுத்தி வேறொரு பேருந்தில் வரும்படி கூறியிருக்கலாம் அதை விட்டுவிட்டு மாணவர்கள் படியில் தொங்கி செல்வதை பார்த்தும் பேருந்து இறங்குவது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது என்கின்றனர் பொதுமக்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
