மாவட்ட செய்திகள்
வல்லம், ஏப்.20- தஞ்சை அருகே கோயில் திருவிழாவிற்கு வந்தவரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே முத்தாண்டிப்பட்டியை சேர்ந்த சிங்காரம் என்பவரின் மகன் பஞ்சையன் (55). இவர் தனது உறவினர் ஊரான துலுக்கம்பட்டியில் நடந்த கோயில் திருவிழாவிற்காக சென்றிருந்தார்.
அப்போது கோயிலுக்கு சென்றபோது அதே பகுதியை சேர்ந்த தியாகராஜன் மகன் குமரேசன் (28), சைவராஜ் மகன் பாரதி (24), சிவசங்கர் மகன் விக்னேஷ் (22), சிந்தாமணி குடியிருப்பு பகுதியை சேர்ந்த பாலு என்பவரின் மகன் பாலசந்தர் (25) ஆகியோர் பஞ்சையனிடம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளனர். இதில் இருதரப்பிற்கும் ஏற்பட்ட பிரச்னையில் பஞ்சையனை குத்து விளக்கால் தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ், பாலச்சந்தரை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
