மாவட்ட செய்திகள்
நிலக்கோட்டையில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பாக வட்ட கிளை தலைவர் அம்மாவாசை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட கிளை துணைத் தலைவர் ஜெயராமன் வரவேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் நீண்ட நாள் கோரிக்கைகளான புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை தொடரவும், 1.1.2020 முதல் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரியும், மத்திய மாநில அரசுகள் விலைவாசியை கட்டுப்படுத்த கோரியும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்களுக்கு ரூபாய 7850 ம் ஓய்வூதியமாக வழங்க கோரியும், ஓய்வூதியர்களுக்கு மருத்துவமனைகளில் இலவச மருத்துவம் வழங்க கோரியும் நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுத்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் முருகேசன், கோபால், சிரில் ,பிச்சையம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
படவிளக்கம் நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்த போது எடுத்த படம்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
