BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் முறையாக ஓய்வூதியம் வழங்க கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.

தமிழகத்தில் தற்போது உள்ள முதல்வர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் தடையின்றி ஓய்வு ஊதியம் வழங்குவதாகவும்அவர்களின் குறைகளைக் கேட்டு அவ்வப்போது விரைவில் தீர்க்கப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதி அளித்தார் ஆனால் பத்து மாதகாலம் ஆகியும் இதுவரை முறையாக ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் தமிழகம் முழுவதும் ஓய்வூதியதாரர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் ஆத்தூர் வட்ட கிளையின் சார்பில் நடைபெற்றது அப்போது பணி ஓய்வு பெற்ற அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் தடையின்றி ஓய்வு ஊதியம் வழங்கக்கோரியும், காசில்லா மருத்துவத் திட்டம் நடைமுறைப்படுத்தக் கோரியும் 70 வயது நிறைவடைந்த முதியோர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )