BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவரிடம் போலீசார் விசாரணை.

தூத்துக்குடியில் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி பூபால்ராயபுரம் 6வது தெருவை சேர்ந்தவர் வினோத் ஆட்டோ டிரைவரான இவருக்கு விஜி (39) என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். வினோத் அடிக்கடி தனது மனைவி விஜி நடத்தையில் சந்தேகப்பட்டு வந்தாராம். இதனால் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. இன்று மதியம் இதுபோல் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாலை 5 மணி அளவில் விஜி வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.

அவரை உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வடபாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து அவரது கணவர் வினோத்திடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )