BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் செல்ல வசதியாக சாலை சீரமைக்கும் பணி தீவிரம்.

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி தேர் செல்லும் பொள்ளாச்சி சாலையில் உள்ள மைய தடுப்புகளை தற்காலிகமாக அகற்றிவிட்டு சாலையை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
உடுமலை பழமை மற்றும் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த ஐந்தாம் தேதி நோன்பு சாட்டுவது டன் தொடங்கி நடந்து வருகிறது தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 21ஆம் தேதி 4.15 மணி அளவில் நடக்கிறது இந்த தேர் கோவில் வளாகத்தில் உள்ள தேர் நிலையில் இருந்து புறப்பட்டு தளி ரோடு வடக்கு குட்டை வீதி சதாசிவம் வீதி தங்கம்மாள் ஓடை வீதி கொல்லம் பட்டறை பொள்ளாச்சி ரோடு வழியாக தேர் நிலையை வந்தடையும். இந்தத் தேரை பக்தர்கள் முன்னாலிருந்து இழுத்துச்செல்ல பின்பறமிருந்து யானை தள்ளிச் செல்லும்
தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் சாலையின் இருபுறமும் கூட்டம் அதிகமாக இருக்கும் பொள்ளாச்சி ரோடு முன்பு அகலமாக இருந்தது தேசிய நெடுஞ்சாலை யான இந்த சாலையில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிறிது தூரத்திற்கு நகர்த்திக் கொள்ள கூடிய வகையில் மைய தடுப்பு கற்கள் சாலை நடுவில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இதில் கொல்லம் பட்டறை பகுதியில் பொள்ளாச்சி சாலையின் நடுவில் நிரந்தர காங்கிரீட் அமைக்கப்பட்டது.

நகர்த்தி கொள்ளும் வகையிலான மைய தடுப்புகளை தேரோட்டத்தையொட்டி சாலையின் ஓரம் நகர்த்தி வைத்துக் கொள்ள முடியும் ஆனால் நிரந்தர காங்கிரீட் மைய தடுப்பால் தேரோட்டத்திற்கு பக்தர்களுக்கு சிரமம் ஏற்படும் இதைத்தொடர்ந்து நிரந்தர கான்கிரீட் தடுப்புகளை அகற்றிவிட்டு நகர்த்தி வைத்துக் கொள்ளும் வகையிலான தடுப்பு வைத்துக் கொள்ளும் படியும் தேரோட்டத்தையொட்டி தேரோட்டம் முடியும் வரை அந்த மைய தடுப்பு கற்களை சாலையோரம் வைத்திருக்க முடியும்.


இதை தொடர்ந்து பொள்ளாச்சி சாலையில் கொல்லம் பட்டறை பகுதியில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர மைய தடுப்புகள் அகற்றப்பட்டு அந்த இடத்தில் தார் சாலையாக சமன்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது இந்த பணிகள் நகராட்சி தலைவர் மு.மத்தின் முன்னிலையில் நடந்து வருகிறது .

தேரோட்டம் முடிந்த பிறகு அந்தப் பகுதியிலும் மற்ற ஒருசில பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளது போது நகர்த்தி கொள்ளும் வகையிலான தடுப்பு கற்களை வைப்பதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த பணிகளை உடுமலை நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் நகராட்சி துணைத்தலைவர் கலைராஜன் மற்றும் நகர்நல அலுவலர் டாக்டர் கௌரிசங்கர் சுகாதார ஆய்வாளர் செல்வம் ஆகியோர் கழிவறை வசதிகளையும் குடிநீர் வசதிகளையும் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )