மாவட்ட செய்திகள்
திருவோணம் வருவாய் வட்டம் விரைவில் உதயம்: அமைச்சர் ராமச்சந்திரன்!
தஞ்சை மாவட்டத்தில் திருவோணம் வருவாய் வட்டம் புதியதாக உருவாக்கப்படும் என வருவாய் துறை அமைச்சர் கூறியுள்ளார், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை வட்டங்களை சீரமைத்து ரூ 7.56 கோடியில் திருவோணம் வருவாய் வட்டம் உருவாக்கப்படும். தஞ்சை மாவட்டங்களில் 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடம் நிரப்பப்படும் என்று கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்தார். கடலூர் விஜயமாநகரம், புதுக்கூரைப்பேட்டை கிராமங்களில் சுமார் 3,000 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படும் எனவும் நரசிங்கராயன்பேட்டையில் அரசு நிலத்தில் வசிப்பவர்களுக்கு வகைப்பாடு மாற்றம் செய்து பட்டா வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.