மாவட்ட செய்திகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி தாலுகா 35-வது மாநாடு நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி தாலுகா 35-வது மாநாடு நடந்தது. ராமகிருஷ்ணன், ஜெகநாதன், மாரியம்மாள் ஆகியோர் தலைமை வகித்தனர். இன்னாசிமுத்து மாநாட்டு கொடியேற்றினார். தாலுகா செயலாளர் பாபு அறிக்கை வாசித்தார். இதில், சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் (பொறுப்பு) கரும்பன், மாவட்ட உதவிச் செயலாளர் சேதுராமலிங்கம் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். இதில், புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தாலுகா செயலாளராக பாபு, உதவி செயலாளர்களாக ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், பொருளாளர் மாரியப்பன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், மாவட்ட மாநாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிகள் தேர்வும் நடந்தது.

மாநாட்டில், 2020-21-ம் ஆண்டில் பயிர்க்காப்ழுடு செய்துள்ள விவசாயிகளுக்கு பெயரளவில் ஒரு சில கிராமங்களில் மட்டுமே மக்காச்சோளம் பயிருக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கிராமங்கள் விடுபட்டுள்ளது. எனவே, பயிர்காப்பீடு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து பயிர்களுக்கும் இழப்பீட்டுத்தொகை உடனடியாக வழங்க வேண்டும்.

மானாவாரி விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் அனைத்து கிராமங்களிலும் விவசாய விளை பொருள் சேமிப்புக் கிடங்குகளை அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதி மாணவகிள் அதிகளவு செவிலியர் படிப்பு படித்து வருகின்றனர். எனவே, கோவில்பட்டியில் தமிழக அரசு செவிலியர் பயிற்சி கல்லூரி தொடங்க வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை அதிகப்படுத்த வேண்டும். கேரளா மாநிலத்தை போல் 100 நாள் வேலை பணியை விவசாய பணிகளுடன் இணைத்து, தினசரி சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும். 60 வயது கடந்த தகுதி உள்ள அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் மாதந்தோறும் ரூ.3,000 வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
